பதிவு செய்த நாள்
10
மார்
2015
02:03
திட்டமிட்டு செயலாற்றும்மேஷ ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன்,ராகு மாதம் முழுவதும் நன்மையளிப்பர். சூரியனும், புதனும் சாதகமற்று இருந்தாலும் கவலை வேண்டாம். மார்ச் 21 வரை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். முயற்சி வெற்றி பெறும். ஏப். 6 க்கு பிறகு குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடும். மாத தொடக்கத்தில் குடும்பம் முன்னேற்றப்பாதையில் செல்லும். பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என அடிக்கடி செல்வீர்கள். மார்ச் 18,19ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில், பகைவர் சதியை முறியடிக்கும் வலிமை உண்டாகும். ஆற்றல் மேம்படும். சூரியனால் விரயம் ஏற்படலாம். வீண் செலவைத் தவிர்க்கவும். அறிமுகம் இல்லாதவர்களை நம்ப வேண்டாம்.
பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியில் குறுக்கிடும் பிரச்னை சுக்கிரனால் விரைவில் தீரும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். ஏப். 6க்கு பிறகு இடமாற்றம் ஏற்படலாம். மார்ச் 16,17 ஏப். 12,13 தேதிகளில் சாதக பலன் கிடைக்கும்.
கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஏப். 7க்கு பிறகு சமூக மதிப்பு கூடும். அரசு விருது, பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தலைமையின் வழிகாட்டுதலை ஏற்று முன்னேறுவர்.
மாணவர்களுக்கு, புதன் சாதகமாக இருப்பதால் நன்மை உண்டாகும். போட்டியில் அடிக்கடி பங்கேற்று வெற்றி பெறுவர்.
விவசாயிகளுக்கு கால்நடை செல்வம் பெருகும். வழக்கு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நற்பெயர் காண்பர். அண்டை வீட்டார் ஆதரவுடன் இருப்பர்.
நல்ல நாள்: மார்ச்18, 19, 20, 21, 22, 23, 24, 27, 28ஏப். 3, 4, 5, 6, 7, 12, 13
கவன நாள்: ஏப்.8, 9 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7, 8 நிறம்: வெண்மை, நீலம்
வழிபாடு: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். வீட்டில் விளக்கேற்றி முருகனை வழிபடுங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். குலதெய்வ வழிபாடு அவசியம்.