பதிவு செய்த நாள்
12
மார்
2015
12:03
அவிநாசி : திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிரவு 9:00க்கு, பூண்டியில் இருந்து திருமுருகநாத சுவாமி வருகை தரும் காட்சி நடக்கிறது.வரும் 24 இரவு, சூரிய சந்திர மண்டல காட்சியில் சுவாமி புறப்பாடு; 25ல் பூத, அன்ன, அதிகார நந்தி, கிளி வாகனங்களில் சுவாமி புறப்பாடு; 26ல் புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சிகள் நடக்கின்றன. பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம், ஏப்., 27 இரவு 7:00க்கு துவங்கி, விடிய விடிய நடைபெறும்.ஏப்., 28ல் திருக்கல்யாணம், கற்பக விருட்சம், யானை வாகனத்ததில் சுவாமி புறப்பாடு நடக்கும். 29 அதிகாலை 5:00க்கு, பூர நட்சத்திரத்தில் சோமாஸ்கந்தர், கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், தேர்களுக்கு எழுந்தருள்கின்றனர். அன்றிரவு 10:00 மணி, மறுநாள் காலை 10:00 மணிக்கு, மீண்டும் தேரோட்டம் நடக்கிது.மே 1 இரவு, அம்மன் தேர் வடம் பிடித்தல்; மே 2ல் வண்டித்தாரை, பரிவேட்டை, தெப்போற்சவம்; மே 3ல் நடராஜ பெருமானின் பிரம்ம தாண்டவ தரிசன காட்சி நடைபெற உள்ளது. 4ம் தேதி காலை, மஞ்சள் நீர் விழா, மாலை 6:00க்கு மயில் வாகனத்தில் சுப்ரமணியர் வீதியுலாவுடன், சித்திரை திருவிழா நிறைவடையும்.