தியாகதுருகம்: தியாகதுருகம் கருமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. தியாகதுருகம் துணைமின்நிலையம் அருகில் உள்ள கருமாரியம்மன் ÷ காவில் திருவிழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மன் அலங்கரித்து திருவீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத பாடல் சொற்பொழிவு நடந்தது. நேற்று முன்தினம் சக்தி அழைத்து கூழ்வார்த்தல் நடந்தது. காத்தவராயன் மோடிஎடுத்தல், ஆரியமாலா, காத்தவராயன் திருக்கல்யாண வைபவம், கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 9ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றினர். தர்மகர்த்தா வேலு, ராமு, வெள் ளையன், ÷ த.மு.தி.க., ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், பச்சையாபிள்ளை, சேகர் கலந்து கொண்டனர்.