Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்தேஸ்வரர் விநாயகர் கோயிலில் மஹா ... கோதண்ட ராமசுவாமி கோயில் கொடியேற்றம்! கோதண்ட ராமசுவாமி கோயில் கொடியேற்றம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் மன்றத்தின் 158வது உழவாரப்பணி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் மன்றத்தின் 158வது உழவாரப்பணி!

பதிவு செய்த நாள்

19 மார்
2015
05:03

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள  கோவில்களில் 13 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. உழவாரப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கோவில் பராமரிப்பு அற்ற நிலையில் மற்றும் நித்திய  பூஜை நடைபெறாத நிலையில் உள்ள ஆலயங்களை பார்வையிட்டு விவரம் அறிந்து அனைத்து அடியார்களுக்கும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அக்கோவில் பிரகாரம் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், பிரகாரத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்களை எழுதுதல் போன்ற பணிகள் நடைபெறும். இதுவரை 157 கோவில்களில் உழவாரப்பணி செய்யப்பட்டுள்ளது.

இந்த உழவாரப்பணியில்  400க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள். திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம்.

வருகிற 22ம் தேதி சென்னை அருகில் உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில், 158 வது  உழவாரப்பணி நடைபெற இருக்கிறது.  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உழவாரப்பணி. மதியம் 2 மணிக்கு அடியார் தமை அமுது செய்வித்தல். தொடர்ந்து உழவாரப்பணி திருக்கூட்டம். மாலை 5 மணிக்கு அடியார் பெருமக்கள் அனைவரும் இறைவர் திருமுன்பு கூட்டு வழிபாடு. அதன்பின் அடியார்கள் அனைவரும் ஒன்றாக புறப்படுவார்கள்.

தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar