கோத்தகிரி : கோத்தகிரி பேட்லாடா மாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, அதிகாலை முதல் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. காலை, 9:00 மணிமுதல் பகல் 2:00 மணிவரை, தண்டு மாரியம்மன் வெள்ளித்தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, ஆடல் பாடல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் காரியதரிசி வக்கீல் சந்தான கோபால் உட்பட ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.