பதிவு செய்த நாள்
20
மார்
2015
12:03
சசிகலாவின் அண்ணியும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவருமான, இளவரசி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், புதன் கிழமை தோறும், நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி வருகிறார்.
ரகசியம்: இதற்காக, புதன் தோறும் இரவில், தன் மகளுடன் கோவிலுக்கு வரும் இளவரசிக்கு, கோவில் நிர்வாகத்தார் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவதுடன், அவரது வருகை பற்றிய விஷயத்தையும் ரகசியமாக வைத்து உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றவர்களில், இளவரசியும் ஒருவர். ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவின் அண்ணன் மனைவியான இவரும், ÷ பாயஸ் தோட்டத்தில் தான் வசித்து வருகிறார். சிறை தண்டனையை எதிர்த்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பில் தொடரப்பட்டுள்ள ÷ மல்முறையீட்டு வழக்கில், இறுதி தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுலை பெற வேண்டி, அ.தி.மு.க.,வினர் ஊரெங்கும் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதேபோல், இளவரசியும், அவரது மகளும் இந்த வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனரா அல்லது வேறு ஏதாவது வேண்டுதலா என, தெரியவில்லை என்கின்றனர், கோவில் நிர்வாகத்தினர்.இதுகுறித்து, ÷ காவில் வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள் வருமாறு:ஒவ்வொரு புதன் கிழமையும், இரவு 9:00 மணியளவில், இளவரசியும் அவரது மகளும், பார்த்தசாரதி கோவிலுக்கு வருகின்றனர். அந்த நேரத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக தான் இருக்கும். சில நாட்களில், இளவரசியின் மகள் மட்டும் வந்து செல்கிறார்.
இனிப்பு வகைகள்: அவரது வருகைக்கு முன்பே, நெய் தீபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். தீபங்களை ஏற்றிய பின், அவருக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை, கோவில் மேலாளர் ஜோதி மகாலிங்கம் பார்த்துக் கொள்வார். மேலும், தரிசனம் முடிந்து, அவர்கள் திரும்பும் போது, ஒவ்வொரு வாரமும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதற்காக, புதன் கிழமைகளில் சிறப்பு இனிப்பு வகைகளை, ÷ காவில் மடப்பள்ளியிலேயே தயாரிக்கின்றனர்.
இவ்வாறு, கோவில் வட்டாரத்தில் கூறப்படு கிறது.
பிரசாதம் வழங்குவது நிறுத்தம்: ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, தினமும் ஐந்து கோவில்களில், சிறப்பு பூஜை நடத்தி, அந்த பிரசாதத்தை, சென்னைக்கு அனுப்பி வைக்க, அறநிலையத் துறை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்து, தினமும் பிரசாதம் எடுத்து வரப்பட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின், அவை மொத்தமாக, இந்த ÷ காவில் மேலாளர் மூலமாக, போயஸ் தோட்டத்தில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக, ரகசியமாக நடந்து வந்த இந்த நடைமுறை பற்றிய செய்தி, நமது நாளிதழில் வெளியானது. அதையடுத்து, அதுபோன்ற நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டதுடன், உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது என, கோவில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
– நமது சிறப்பு நிருபர் –