சிதம்பரம்: சிதம்பரம் கோதண்டராம சுவாமி கோவிலில் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, நேற்று காலை 6:30 மணியில் இருந்து 7:45 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து இன்று (21ம் தேதி) பல்லக்கும், நாளை (22ம் தேதி) கமலீஸ்வரன் கோவில் தெரு கோவிந்தராஜா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுதல் நடைபெறும். தொடர்ந்து 28ம் தேதி காலை 5:30 மணியில் இருந்து 6:15 மணி வரை ரதோஸ்தவமும், மாலை சீதா கல்யாணமும் நடக்கிறது. 29ம் தேதி ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம், இரவு புஷ்ப பல்லக்கும், 31ம் தேதி திருமஞ்சனம் நடைபெறும்.விழாவைத் தொடர்ந்து தினமும் காலை, இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை டிரஸ்டிகள் திருவேங்கடம், கிருஷ்ணமாச்சாரி, சுதர்சனன் செய்து வருகின்றனர்.