காளையார்கோவில் : உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை அனுக்கை,விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருவார். ஏப்ரல் 1ல் பக்தர்கள் தீச்சட்டி, காவடி எடுப்பர்.ஏப்ரல் 2 அன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கும். ஏப்ரல் 3ல் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள், உருவாட்டி கிராமத்தினர் ஏற்பாட்டை செய்துள்ளனர்.