பொன்னேரி: பொன்னேரி, ஷீரடி சிவபுரம் சாய்நாத மந்திர் கோவிலில், நாளை (28ம் தேதி), எட்டாம் ஆண்டு குரு பூஜை மற்றும் ஸ்ரீராம நவமி திருவிழா நடைபெறுகிறது. நாளை காலை, 5:00 மணிக்குகணபதி ஹோமமும்; காலை, 7:00 மணிக்குபாலாபிஷேகமும்; காலை, 9:00 மணிக்கு தேர் திருவிழாவும்; மாலை, 5:00 மணிக்கு பக்தி பாடல்களும்; இரவு, 9:00 மணிக்கு பாபா பவனி வருதலும் நடைபெற உள்ளன.