பதிவு செய்த நாள்
28
மார்
2015
12:03
சேலம்: சேலம், எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில், நேற்று இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. கடந்த, மார்ச், 17ம் தேதி இரவு, 7 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. கடந்த, 24ம் தேதி பக்தர்கள் மா விளக்கு ஊர்வலம் சென்றனர். 25ம் தேதி காவடி, அலகு குத்தி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று, முதலாம் ஆண்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. வண்டிவேடிக்கையில் சிவன், பிரம்மா, விஷ்ணு, முப்பெரும் தேவியர் லட்சுமி, சக்தி, சரஸ்வதி, மற்றும் காளி, வீரபத்திரர் உள்பட பல்வேறு வேடங்களுடன் ஊர்வலமாக வந்து பத்தர்களை பரவசப்படுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று சத்தாபரண நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.