தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2015 12:03
மதுரை: மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை(மார்ச் 29) தொடங்கி, ஏப்.4 வரை நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. மார்ச் 30 காலை 7 மணிக்கு பால்குடம், காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.3 இரவு 7 மணிக்கு இம்மையில் நன்மை தருவார் கோயில் திருப்புகழ் சபை குழுவினரின் திருப்புகழ், தேவார பாராயணங்களுடன் சுவாமி, மாசி வீதிகளில் உலா வருகிறார். ஏப்.4ல் அன்னதானம் என நிர்வாக அதிகாரி மாலதி தெரிவித்தார்.