அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள நூற்றாண்டு புகழ் வாய்ந்த பெருமாள் கோயிலை புனரமைக்க இந்து அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.அருப்புக்கோட்டை அருகே உள்ளது கோவிலாங்குளம். நான்கு வழிச்சாலையில் இருந்து 2 கி.மீ., உட்புறம் அமைந்துள்ளது. இங்கு 300 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அழகியபெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு கட்டுபட்ட இந்த கோயில், ஆகம விதிகளின் கட்டப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வரை கோயிலில் தினசரி பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடந்து வந்தது. புகழ் வாய்ந்த இந்த கோயில் தற்போது பூட்டிக் கிடக்கிறது. கோயிலை சுற்றிய சுவர்கள், கோயில் கோபுரங்கள் சிதலமடைந்து உள்ளன. கோயில் முழுவதும் முட்புதர்களாக காட்சி அளிக்கிறது. தொல்லியல்துறை ஆய்வாளர்கள் பார்வையிட்டு ஆராய்ச்சி குறிப்புகளை எடுத்து சென்றுள்ளனர். ஒரு கால பூஜைக்கு அரசு நிதி ஒதுக்கி இருந்தது. கடந்த ஒரு ஆண்டாக அதுவும் வராததால் ஒரு கால பூஜை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலை புனரமைப்பு செய்து, மூன்று கால பூஜைகள் நடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.