நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் விழாவில் மஞ்சள் நீராட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2015 12:04
நிலக்கோட்டை: நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் இன்று மஞ்சள் நீராட்டு, பொன்னூஞ்சல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்தது. பகவதி, சரஸ்வதி, மீனாட்சி, லட்சுமி அலங்காரங்களுடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் நேரத்திக்கடன் செலுத்தினர். தீச்சட்டி எடுத்தும், பொங்கல் படைத்தும் வழிபட்டனர். நேற்று அம்மன் பூ பல்லக்கில் வீதியுலா வந்தார். இன்று மாலை மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைகிறார். பெண்கள் கும்மி, அம்மன் பொன்னூஞ்சல் தாலாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் முறை நிர்வாகிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், பெரியசாமி, சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் செய்து இருந்தனர்.