பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி தேரோட்டம் பெரியகுளத்தில் இன்று நடக்கிறது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் மூலவர் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கிறது. தென்மாவட்டங்களில் பிரசித்திப்பெற்ற தேர்திருவிழாக்களின் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் விழாவாக பாலசுப்பிரமணியர் கோயில் தேரோட்டம் உள்ளது. காவல்தெய்வமான வீச்சுகருப்பணசுவாமி கோயில் எதிர்புறம் தேர்நிலையிலிருந்து தேர் மாலை 5 மணிக்கு புறப்படும். பாலசுப்பிரமணியர் கோயிலிருந்து உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், அறம்வளர்த்த நாயகி, முருகன் உள்ளிட்ட தெய்வங்கள் வரவழைக்கப்பட்டு தேரில் வீதி உலா வருவர். தென்மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் ஆன்மிக பக்தர்கள் செய்து வருகின்றனர்.