அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டையில் சித்தகிரி முருகப்பெருமான் கோவிலில் பங்குனிஉத்திரவிழா நடந்தது.
வி ழாவை யொட்டி நேற்று அதிகாலை 4மணிக்கு மூலவர் அபிஷேகம், 5 மணிக்கு சக்திவேல் காவடி அபிஷேகம், அர்ச்சனை மகாதீபாரதனை, சக்தி வேல் காவடி மற்றும் சேவார்த்திகள் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து 9.30மணிக்கு 250 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைஅடிவாரத்திலிருந்து, முதுகில் கொக்கி அணிந்து புஷ்பரதம், டிராக்டர், மாட்டுவண்டி மற்றும் கல்உருளை ஆகியவற்றை இழுத்து மாட வீதி வழியாகஊர்வலம் சென்றனர். மதியம் ஆன்மிக சொற்பொழிவும், மாலையில் சுவாமி திருக்கல்யாணநிகழ்ச்சியும் நடந்தது.
இதில் விழா குழுதலைவர் அண்ணாமலை, ஊராட்சி மன்ற தலைவர் கலாராஜ வேலாயுதம், விழாக்குழுவினர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.செஞ்சி டி.எஸ்.பி., முரளி தரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.