சேந்தநாடு திரவுபதி அம்மன்கோவிலில் திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2015 02:04
உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாடு ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி பரம்பரை அறங்காவலர் ராமசாமி தலைமையில் நேற்று காலை 9:00 மணிக்கு நவக்கிரக யாகம் நடந்தது. அதனை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7: 30 மணிக்கு ஸ்ரீதிரவுபதியம்மன், அர்ஜூனன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, குழந்தையின் கையால் அம்மனுக்கு தாலி கட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இன்று முதல் 3 நாட்கள் இரவு சுவாமி வீதியுலாவும், 8ம் தேதி இரவு 7 மணிக்கு அரவான் கடபலியும், வீதியுலாவும் மற்றும் 9ம் தேதி காலை ரதோற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 10ம் தேதி மாலை 5:30 மணிக்கு தீ மிதித்தலும், 11ம் தேதி மாலை மஞ்சள் நீர் உற்சவமும், 12ம் தேதி காலை பட்டாபிஷேகமும் நடக்கிறது.