திண்டிவனம்: செஞ்சிரோடு பாலமுருகன் கோவிலில் பிரத்தியங்கிரா பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.கோவிலில் பஞ்சலோகத்தாலான மஹா பிரத்தியங்கிரா பரமேஸ்வரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய் யபட்டுள்ளது. கடந்த 2ம் தேதி மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் இயந்திர பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகவேள்வி முடிந்து, புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வந்து சன்னதி கோபுர உச்சி கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது.பூஜைகளை நாகராஜ் ஐயர், சிறுவாடி சீனிவாச சுவாமிகள் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.