பழநி: பழநி பெரியாவுடையார் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். பழநி பெரியாவுடையார் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை பார்வையிட்ட அமைச்சர் கூறியதாவது:"" பங்குனிஉத்திர விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கோயில், நகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துதரப் பட்டுள்ளது. பெரியாவுடையார் கோயிலில் 95 சதவீதம் திருப்பணிகள் நிறைவுஅடைந்துள்ளது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். மலைக்கோயிலில் இரண்டாவது "ரோப்கார் அமைக்க "டெண்டர் கோரப்பட்டு உள்ளது. மெட்டீரியல் ரோப்கார் சரிசெய்து விரைவில் இயக்கப்படும்,என்றார். கோயில் இணைஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா மற்றும் கோயில் அதிகாரிகள் உடனிருந்தனர்.