திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு ஏப்.5ல் பட்டாபிஷேகம் நடக்கிறது. பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப். 6ல் நடக்கிறது. அதன் முன் நிகழ்ச்சியாக ஏப்.5 தேதி இரவு 7.15 முதல் 7.30 மணிக்குள் கோயில் ஆறுகால் பீடத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹார லீலையை முன்னிட்டு காலை வீதி உலா நிகழ்ச்சியில் யானை, ஆடு, சிங்கம் உட்பட பல்வேறு தலைகளுடன் மாறி மாறி சூரபத்மன் முன்செல்ல, வெள்ளை குதிரை வாகனத்தில் வீரபாகுத் தேவரும், திருவிழா நம்பியார் ரமேஷ் சிவாச்சார்யார் வாள் ஏந்தி சென்றனர். தொடர்ந்து கௌதா சப்பரத்துடன், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வேலுடன் விரட்டிச் சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார புராண கதையை சிவாச்சார்யார் பக்தர்களுக்கு கூறினார். வழக்கமாக சூரசம்ஹாரம் மாலை 6 மணிக்கு நடைபெறும். மாலை 3.45முதல் இரவு 7.15வரை சந்திரகிரகணம் என்பதால், காலை 10 மணிக்கு சூரசம்ஹாரம் லீலை நிகழ்ச்சி நடந்தது.