கடலூர்: ஈஸ்டர் தினத்தையொட்டி கடலூரில் உள்ள சர்ச்சுகளில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். நேற்று ஈஸ்டர் தினத்தையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பாடல்களை பாடினர். தொடர்ந்து பங்கு தந்தை அந்தோணிராஜ் தலைமையில் சிறப்பு திருப் பலி,சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதே போன்று கடலூர் சப் ஜெயில் சாலையில் உள்ள துõய எபிபெனி ஆலயம், பாரதி சாலையில் உள்ள ஆற்காடு லூத்தரன் திருச்சபை, செம்மண்டலம் பாவநாசர் ஆலயம் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.