மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் நவராத்திரி உற்சவம் பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. நவராத்திரி உற்சவத்தின் இறுதிநாளில் நடைபெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்தத் தேர்த்திருவிழாவிற்கு ஆஜராகிவிடுவார்கள். மைசூரை அரசாண்டவர்கள் பரம்பரையினர் இங்கு வந்து தங்கி இளைப்பாற பங்களாக்களும், பொதுமக்கள் தங்க சத்திரம், விடுதி என்று பல வசதிகளும் இங்குண்டு.