சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி பெருக்கு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2025 04:08
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் வணிகர் நலச் சங்கம் சார்பில் ஆடிப்பெருக்கையொட்டி அன்னதான விழா நடைபெற்றது.
காலை 11:00 மணிக்கு சித்தருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க மலைபோல் குவிக்கப்பட்டு வைத்திருந்த அன்னத்தில் வேல் பிரதிஷ்டை செய்தனர். இதில் சிங்கம்புணரி வணிக நலச்சங்க நிர்வாகிகள், வாரிசுதாரர்கள், பூஜகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவின் நிறைவு நாளையொட்டி சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது. பாரதி நகர் நொண்டி கருப்பர் கோயிலில் ஆடி பெருக்கு விழா அன்னதானம் நடந்தது.