ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2025 04:08
அன்னூர்; ஆடிப்பெருக்கை முன்னிட்டு அன்னூர் வட்டாரத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு அன்னூர் வட்டாரத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சின்னம்மன் கோவிலில், காலையில் அம்மனுக்கு பால், பன்னிர், தயிர், சந்தனம், நெய் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூர் ஓதிமலை சாலையில் உள்ள பெரிய அம்மன் கோவில், தென்னம்பாளையம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதி ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.