திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், சந்தப்பேட்டை படவேடு ரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாடாகி 10:20 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில், சோட சோபவுபச்சார தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. முன்னாள் எம்.பி., ஆதிசங்கர், அஞ்சுகம் ஆதிசங்கர் தலைமையில், நடந்த இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கவுன்சிலர் சக்தி, செந்தில், பிரகாஷ், சதீஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.