பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா, மார்ச் 26 ல் துவங்கியது. நேற்று காலை 4 மணி முதல் பல்வேறு அமைப்பு சார்பில், வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் உட்பட ஏராளமானோர் "சக்தி கோஷம் முழங்க, பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் 2 முதல் 18 அடி நீளமுள்ள வேல் குத்தி வந்தனர். 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சந்தனம், பன்னீர், இளநீர், பழச்சாறு, பால் அபிஷேகம் நடந்தது. இரவு அம்மன் பூப்பல்லக்கில் சயன கோலத்தில் வீதியுலா வந்தார். இது குறித்து ரத்தினேஸ்வரன், அவரது நண்பர் கண்ணதாசன் ஆகியோரை திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் சேது கைது செய்தார்.