திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2015 12:04
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு, நடராஜர் சன்னதிக்கு முன்பு குன்றக்குடி தேவஸ்தான ஆதீனம் பொன்னம்பல அடிகள் முன்னிலையில் 72 புனித நீர் கலசங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் யாகபூஜை நடத்தினர். தொடர்ந்து யாகசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரால் நாயன்மார்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய "நால்வர் பல்லக்கில் முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்களில் மும்முறை வலம் வந்தனர். அடுத்து அன்னதானம் நடந்தது.