பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
11:04
திருவொற்றியூர் :திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தை அடுத்து, 48 நாள் மண்டல பூர்த்தி விழா, நேற்று முதல் துவங்கியது. திருவொற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற, 48 நாள் மண்டல பூர்த்தி விழாவின் நான்கு கால பூஜை, நேற்று முதல் துவங்கியது. நான்கு கால பூஜையிலும், வடிவுடையம்மனுக்கு, 1,008 கலசாபிஷேகமும், ஆதிபுரிஸ்வரருக்கு, 1,008 சங்காபிஷேகமும் நடைபெற உள்ளன. ஒற்றீஸ்வரருக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகமும், தியாகராஜர் மற்றும் வட்டப்பாடியம்மனுக்கு, 108 வலம்புரி மற்றும் கலசாபிஷேகமும் நடைபெற உள்ளன.வரும் 10ம் தேதி மாலை, திருவீதியுலா நடைபெறும்.