பதிவு செய்த நாள்
10
ஏப்
2015
11:04
திண்டுக்கல்: சின்னாளப்பட்டி, மேட்டுப்பட்டி ஸ்ரீ அஞ்சலி வரத விஸ்வரூப ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர், வரப்பிரசாதி அவருக்கு. சித்திரை-1 (14-4-2015) செவ்வாய்க்கிழமை சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும் அதிபிரம்மாண்டமான வஜ்சரஅங்கி சேவையுடன் 10,008 பழக்காப்பு அலங்காரம் சாற்றப்படுகிறது. பக்தர்கள் இக்கனிக்காப்பு அலங்காரத்தில் பங்குகொண்டு ஆஞ்சநேயரின் மனதை கனியச் செய்யவும், காரியங்கள் ஜெயம் உண்டாகவும் பழக்காப்பில் பங்கு பெறலாம்.
பழக்காப்பிற்கு சமர்ப்பிக்க வேண்டிய பழங்களான, ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, கொய்யா, திராட்சை, மாதுளை, சாத்துக்குடி, எலுமிச்சை, தேங்காய், பலாப்பழம், பச்சை திராட்சை ஆகியவற்றை பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு 2 நாள் முன்னதாக 12-4-2015 மாலைக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு: வி.ஆர். சுந்தரராஜ பட்டச்சாரியார்
செல்: 94432 26861