விழுப்புரம் மாவட்டம். திண்டி வனம் - மரக்காணம் செல்லும் வழியில் உள்ளது. முன்னூர் கிராமம். இங்குள்ள ஆறுமுகப்பெருமானுக்கு சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று வேல் திருவிழா நடை பெறுகிறது. இதில் கலந்துகொண்டு கந்தக் கடவுளைப் பிரார்த்தித்தால் திருமண யோகம் கைகூடும் பிள்ளை பாக்கியம் பெறுவர். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.