மன்மத ஆண்டில், குரு ஆனி 20 ( ஜூலை5) இரவு 1.03 மணிக்கு கடகத்தில் இருந்து சிம்மத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ராகு மார்கழி23 (2016 ஜன.8) பகல் 12.01 மணிக்கு கன்னியில் இருந்து சிம்மத்திற்கும், கேது மீனத்தில் இருந்து கும்பத்திற்கும் பெயர்ச்சியாகிறார். சூரிய கிரகணம் மாசி26 (2016 மார்ச் 9)ல் காலை 6.30 - 6.44 மணி வரை ஏற்படுகிறது. புனர்பூசம், விசாகம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தினர், புதன்கிழமையில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். மன்மத ஆண்டின் ராஜாவாக சனீஸ்வரர் ஆட்சி செய்கிறார். இவருக்குரிய தெய்வமான சாஸ்தாவை (ஐயப்பன்) ஆண்டு முழுவதும் வழிபடுவது நன்மை தரும்.