பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
12:04
கடலூர்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் காலை 5:00 மணிக்கு கோ பூஜை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 11:00 மணிக்கு சுவாமி தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை பாடலீஸ்வரருக்கு அபிஷேகம், பெரிய நாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு பிரதோஷ நாயகர் கோவில் உள்புறப்பாடு நடந்தது.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு சாற்றுமுறை, 8:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்புறப்பாடு நடந்தது. புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில், பஸ் நிலையம் நாகம்மன் ÷ காவில், முதுநகர் ஐந்து கிணற்று அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது.
பண்ருட்டி: பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று 7:30 மணிக்கு விஸ்ரூப தரிசனம் சிறப்பு பூஜை நடந்தது. 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருள்ஜோதி நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ÷ நற்று 16ம் ஆண்டு லட்ச தீப விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் ஆஞ்சநேயர் வெண்ணைக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4:30 மணிக்கு லட்சதீப வைபவம் நடந்தது.
பண்ருட்டி ஆஞ்சநேயர் கோவிலில் 18ம் ஆண்டு லட்சதீப விழாவையொட்டி மூலவர் ஆஞ்சநேயர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அ ருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு லட்சதீபம் நடந்தது.
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிதம்பரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி நடராஜர் கோவில் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நடராஜர் கோவில், அனந்தீஸ்வரர் கோவில், கீழத்தெரு மாரியம்மன் கோவில் பிரம்மராயர், அவதுõது சுவாமிகள், தில்லைக் காளியம்மன், இளமையாக்கினார் கோவில் ஆகிய இடங்களில் புத்தாண்டு சுவாமி தரிசனத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதல் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அனைத்து கோவில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்ததால் நகரம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும். வெள்ளிக் கவசத்தில் தீபாராதனையும் நடந்தது. வேடப்பர் சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வள்ளி தெய்வானை சமேத கோலத்தில் வேடப்பர் சுவாமி அருள்பாலித்தார். சந்தைத் தோப்பு அங்காள பரமேஸ்வரி, ஜங்ஷன் ரோடு ஜெகமுத்து மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கம்மாபுரம்: மகாமாரியம்மன் கோவிலில், காலை அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து புஷ்ப அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலி த்தார்.கைலாசநாதர் கோவில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில், திரவுபதியம்மன் கோவில், காவல் விநாயகர் கோவில், மருத்துவ விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னப்படையல் நிகழ்ச்சிகள் நடந்தன.
சிறுபாக்கம்: ஆண்டவர் கோவிலில் ஆண்டவர் சுவாமி, செல்லியம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமிகள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.
பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவிலில், வீற்றிருந்த பெருமாள் கோவில், முக்குளம் செல்லியம்மன், எல்லையம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளாமானோர் தரிசனம் செய்தனர்.
மங்கலம்பேட்டை: மங்கலநாயகி அம்மன் கோவில், முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவில், அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில், காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
மந்தாரக்குப்பம்: கீழ்பாதி செல்வமுத்துக்குமாரசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 4:00 மணிக்கு கோ பூஜை, கணபதி கோமம், முருக ப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் கூட்டு பிராத்தனை நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
அரிசிபெரியாங்குப்பம் விஜயவல்லித் தாயார் சமேத சக்கரத்தாழ்வார் கோவிலில் உள்ள காரிய சித்தி ஆஞ்சநேயருக்கு நேற்று காலை 5:30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு காரியசித்தி ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு லட்சதீபமும் இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.