சின்னசேலம்: தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி சின்னசேலம் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னசேலம் அரண்மனை மாரிய ம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குடம், அக்னி சட்டி ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது. இதேபோல் சின்னசேலம் அம்சாகுளம் எல்லை அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் நண்பர்கள் குழுவினர், தீப ஒளி குழுவினர் உட்பட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.