உங்களுக்கு ஒருவிஷயத்தில் சந்தேகம் வந்து விட்டது என்றால், அதை நிச்சயமாக செயல்படுத்தக் கூடாது. சந்தேகத்துடன் செய்யப்படும் எந்தசெயலும் தோல்வியையே தழுவும். சில சமயங்களில், அது நம்மை பெரும் சிக்கலில் மாட்டவும் செய்யும். இதுபோல, ஒருவரைப் பற்றி இவர் இப்படித்தான் இருப்பார் என்று சந்தேகத்துடன் பேசுவது, சந்தேகப்படுவது ஆகியவையும் வாழ்க்கையை சூன்யமாக்கி விடும்.நபிகள் நாயகம்சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் தவறான எண்ணங்களை,சந்தேகங்களை விட்டுஉங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவித்துருவி ஆராயாதீர்கள்.உங்களுக்குள்தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள்.ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாகவாழுங்கள், என்கிறார்.