ஹமாம் என்றால் குளிக்கும் இடம் என்று பொருள். அரபு தேசத்தில் பொது குளியல் இடங்களே கிடையாது. அங்கே கடும் தண்ணீர் பஞ்சம். மக்கள் பாரசீகம் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றால், அங்குள்ள பொது குளியல் இடங்களில் குளித்து வருவதுண்டு. நாயகத்தின் துணைவியார் உம்மு ஸல்மா அம்மையாரைக் காண, சிரியா நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் வந்தனர். தங்கள் நாட்டிலுள்ள கும்ஸ் என்ற ஊரிலுள்ள ஹமாம்களில், தாங்கள் நீராடி மகிழ்வது பற்றி அவர்கள் கூறினர்.அவர்களிடம், என்ன! நீங்கள் பொதுவான இடத்திலா குளிக்கிறீர்கள்? என்றார் அம்மையார்.ஆம்.. அதிலென்னதவறு என்று அந்தப் பெண்கள் கேட்டனர். அதற்கு அம்மையார், தன் வீட்டையன்றி வேறு இடத்தில் தன் உடைகளை அவிழ்க்கும் பெண், இறைவனின் அருளை இழந்தவளாவாள், என்றார்.அக்காலத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.