கடவுளை எப்போதும் மறக்கமாட்டேன். யார் எதிர்த்தாலும் உண்மையை கைவிட மாட்டேன். எதற்காகவும் பயப்படமாட்டேன் என இந்த மூன்று லட்சியங்களையும் மனதில் விதையுங்கள். உண்மை எதற்கும் பயப்படுவதில்லை; ஆனால், பொய் நிழலைக் கண்டுகூட பயப்படும். கடவுள் ஒருவரே அனைத்தையும்நிகழ்த்துபவராக இருக்கிறார். மனிதர்கள் அவரால்ஆட்டுவிக்கப்படும்கருவியாக இருக்கிறார்கள். எளிமையாகவும், கடமை உணர்ச்சியுடனும் வாழுங்கள். நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா என, உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.அன்புடன் செய்யப்படும் எந்த வேலைக்கும் மதிப்பு அதிகம். அன்பில்லாத இடத்தில் பக்திஇருப்பதில்லை. அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுங்கள். பிறரது வெற்றி கண்டு பொறாமைப்படுவது, மலர் மொட்டை அழிப்பதை விட கொடுமையானது. தியாகம் செய்வதால் மட்டுமே, நிலையான வெற்றியைப் பெற முடியும். கொடுப்பதற்கு கைகள் தயங்கக்கூடாது; அதற்கு கட்டுப்பாடோ, வரையறையோ வைத்துக் கொள்ளக் கூடாது. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுங்கள். அதுவே ஆரோக்கியத்திற்கு வழி! விநாடி நேரத்தைக்கூட எதற்காகவும் வீணடிக்காதீர்கள். வறுமை உண்டாவதற்கு, பயம் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.நேர்மையான வழியில் செல்பவர்கள், எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.உங்கள் விருப்பம்நிறைவேற வேண்டுமென கடவுளிடம் கேட்க வேண்டியதில்லை. உங்களுக்கு எப்போது என்ன தர வேண்டும் என்பதைப் பற்றி அவருக்குத் தெரியும். ஆர்வத்துடன் செய்யும் வேலையில் கிடைக்கும் வெற்றிக்கு மதிப்பு அதிகம். கடவுளை அடைவதற்கு இப்போதே ஆர்வப்படுங்கள். அவரை இந்த நேரத்திலேயே நேசியுங்கள். நிச்சயமாக அவரை அடைந்து விடுவீர்கள்.ரத்தம் தலையிலிருந்து பாதம் வரையில் கீழ்நோக்கி பாய்வதுபோல, அன்பும் உயரமான இடத்திலிருந்து பாதாளம் வரையில் பாய்கிறது.அறிவைக் கெடுக்கும் கவர்ச்சிக்கு எதிராக நில்லுங்கள். அருகிலிருந்து சூழ்ச்சி செய்யும் பகைவர்களை கண்டறியுங்கள். உங்களுக்குள் இருக்கும் அகம்பாவத்தை வெற்றி கொள்ளுங்கள். இதுவே நீங்களே வெற்றி பெறுவதற்கான வழிகள். எப்போது வருவேன், எப்போது செல்வேன் என கடவுள் யாருக்கும் அறிவிப்பதில்லை. அவர் எப்போதும் எல்லாஇடத்திலும் உலவிக் கொண்டே இருக்கிறார். ஒருவருக்கொருவர் சேவை செய்து கொள்ளும்போதுதான், வாழ்க்கை முழுமைபெறுகிறது. எதிர்காலம் பற்றி கவலைப்படாதீர்கள். நிகழ்காலத்தில் நல்ல முறையில் வாழப் பழகுங்கள். (மகான் சாய்பாபா)