சாதாரண நிகழ்வுகளை உப்பு பெறாத விஷயம் என்று சாதாரணமாகச் சொல்வார்கள். உண்மையில் உப்பின் தன்மை உயர்ந்தது. கடலில் பிறந்தவள் லட்சுமி. எனவே, அதில் கிடைக்கும் உப்பு, லட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. உணவுக்கு ருசி சேர்ப்பது போல, உறவுக்கும் பாலமாக இருக்கிறது. இதனால் கிரகப்பிரவேசத்தின் போது, உறவினர்கள் உப்பு கொண்டு வருகின்றனர். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொல்வதும் இதனால் தான். உப்பைக் கடனாக வாங்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். வீட்டில் உப்பு இல்லாமல் ஒரு போதும் இருக்கக்கூடாது. உப்பு வீணானால் செலவு உண்டாகும் என்பர். கோயில் குளத்தில் உப்பும், மிளகும் இட்டால் ஆரோக்கியமான உடல்நிலை அமையும்.