காரைக்கால்: காரைக்கால் ஆற்றங்கரை உஜ்ஜய்னி காளியம்மன் கோவிலில் விமான பாலஸ்தாபன விழா நடைபெற்றது. காரைக்கால் கயிலாசநாதர்,நித்யகல்யாணப் பெருமாள் கோவிலை சேர்ந்த ஆற்றங்கரைத் தெருவில் உள்ள உஜ்ஜய்னி காளியம்மன் கோவிலில் நேற்று விமான பாலஸ்தாபன விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை அனுக்ஞை வினாயகர் பூஜை,தேவதா அனுக்ஞை,விமான கலாகர்ஷணம், யாக சாலை பூஜைகள், பூர்ணாகுதி தீபாராதனையோடு தொடங்கியது.நேற்று காலை யாகசாலை பூஜை துவக்கப்பட்டு, பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் விமான பாலஸ்தாபனம், மகாதீபாராதனைகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் தனி அதிகாரி ஆசைத்தம்பி, திருப்பணி குழுவின் தலைவர் வெற்றிச்செல்வம், உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, மூர்த்தி, அப்பாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.