பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
12:04
உடுமலை : அடிவள்ளி குடலுார் மாரியம்மன், உச்சி மாகாளியம்மன், முனிமுத்தாலம்மன் கோவில் உற்சவத்திருவிழா, நேற்று கம்பம் போடுதலுடன் துவங்கியது; மே, 1ல் நிறைவடைகிறது. உடுமலை அருகே அடிவள்ளி கிராமத்தில் குடலுார் மாரியம்மன், உச்சி மாகாளியம்மன் மற்றும் முனிமுத்தலாம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் உற்சவத்திருவிழா, நேற்று இரவு, 7:00 மணிக்கு கம்பம் போடுதலுடன் துவங்கியது. இன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வரும், 27 ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. அன்றிரவு, 7:00 மணிக்கு, தீர்த்தம் விடுதல், சிறப்பு அபிேஷக பூஜை நடக்கிறது. 28ம் இரவு, 9:00 மணிக்கு, சக்தி கும்பம் அழைத்து வரப்படுகிறது. 29ம் தேதி காலை, 5:00 மணி முதல், 6:00 மணிக்குள், அம்மன்களுக்கு திருக்கல்யாண உற்சவமும், காலை, 7:00 மணிக்கு, மாவிளக்கு, பொங்கல் வழிபாடும், மாலை, 4:00 மணிக்கு, பூவோடு எடுக்கப்படுகிறது.வரும் 30ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, முனிமுத்தாலம்மன் சிலைகள் குடிசைக்குள் கொண்டு வருதலும், இரவு, 9:00 மணிக்கு, முளைப்பாரி ஊர்வலமும், இரவு, 8:00 மணிக்கு முத்தாலம்மன் ஊர் எல்லையில் விடுதலும் நடக்கிறது. மே, 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதியுலாவும், இரவு, 7:00 மணிக்கு மகா அபிேஷகம், தீபாராதனையும் நடக்கிறது.