பதிவு செய்த நாள்
25
ஏப்
2015
01:04
பவானி,: பவானி, கூடுதுறை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள உண்டியல் திறப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.பண்ணாரி கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ராஜா ஆகியோர் முன்னிலையில், நாமக்கல் மாவட்டம் ஜே.கே.கே.என். மெட்ரிக் பள்ளி மாணவர்கள், மகளிர் குழுவினர், கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் என பலர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முதல் பல்வேறு இடங்களில் உள்ள, 19 உண்டியல்கள், காவிரி வீதியில் உள்ள சின்ன கோவில் என்று அழைக்கப்படும் விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவில் உண்டியல், பழனியாண்டவர் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.இந்த உண்டியல்களில் மொத்தம், 15 லட்சத்து, 63 ஆயிரத்து, 217 ரூபாய் ரொக்கம் மற்றும், 34.600 மில்லி கிராம் தங்கம், 153 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.கோவில் காண்காணிப்பாளர் பாலசுந்தரி, கிளார்க் முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.