பழநி,: பழநி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி மே 4 வரை நடக்கிறது.பழநிமலைக்கோயில் உபகோயிலான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி விழா ஏப்.,25 முதல் மே 4 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. இன்று கொடியேற்றம் நடக்கிறது. மே 1ல் இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணமும், மே 3ல் காலை 7.45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் லட்சுமிநாராயணப்பெருமாள் சேஷம், அனுமார், சிம்ம வாகனங்களில் திருவீதி உலா வருகிறார். பக்திசொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.