கௌஸல்யா சுப்ரஜா ராம எனத் துவங்கும் சுப்ரபாதம் ஸ்லோகம் புகழ் பெற்ற ஒன்று. சமஸ்கிருதம் தெரியாதவர்களைக் கூட முணுமுணுக்க வைக்கும் இந்த ஸ்லோகங்களை சுவையான இசையுடன் பாடியுள்ளனர் நமது இசை மேதைகள். வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான மணவாள மாமுனிகளின் சீடரான பிரதிவாதம் பயங்கரம் அண்ணன் என்பவர் தான் இதை இயற்றினõர். திருப்பதியில் வெங்கடாசலபதி சுப்ரபாதம் பாடலுடன் தான் அதிகாலையில் எழுவார்.