அதிகாலையில் எழுந்து குளிர்ந்திருக்கும் நதி, ஏரி, குளம் அல்லது நீர்நிலைகளில் கிழக்குமுகமாக திரும்பி, இடுப்பில் வஸ்திரம் அணிந்து, மனதில் சஞ்சலங்கள், தீயகுணங்களை அறவே மறைத்துவிட்டு சூரியனை வணங்கியபடி நீராடவேண்டும். ஆண்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் நீராட வேண்டும். அப்போது, தாம் செய்த பாவங்கள் எல்லாம் நீராடும் நீரில் அடித்துச்செல்லும்படி இறைவனிடம் கேட்க வேண்டும். இவ்வாறு நீராடினால் பாவங்கள் நீங்கப்பெற்று, இறைவனின் முழுஅருளையும் பெறலாம் என்பது நம்பிக்கை.