பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
11:04
திருப்பதி: பாத யாத்திரை பக்தர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பெருமளவு பக்தர்கள், பாத யாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, திடீரென, சுவாசக் கோளாறு காரணமாக, தலைசுற்றல், மாரடைப்பு ஏற்படுகிறது. அத்துடன், பலருக்கு மலையேறுவதால், மூட்டு வலி, முழங்கால் வலி மற்றும் சுளுக்கு போன்றவையும் ஏற்படுகிறது. இதனால், பக்தர்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக, குளோபல் மருத்துவமனை, தேவஸ்தானத்தை அணுகியது. இதை ஏற்று, பாத யாத்திரை மார்க்கத்தில், சிறப்பு சிகிச்சை அளிக்க, ஆங்காங்கே முதலுதவி மையத்தை ஏற்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.