பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
11:04
திருவொற்றியூர்: ஆக்கிரமிப்புகளால் திருவொற்றியூர் அப்பர் சுவாமி கோவில் பொலிவிழந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கும்பாபி÷ ஷகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறுகிய வாசல்: திருவொற்றியூரில், அப்பர் சுவாமி நகர் பகுதியில், அப்பர் சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் மூலவராக, தியாகராஜர் என்ற பெயரில் சிவலிங்கம் உள்ளது. திரிபுரசுந்தரி என்ற பெயரில், அம்பாள் விக்கிரகம் உள்ளது. கோவிலில், திருநாவுக்கரசர் என்ற, அப்பர் சுவாமிகள் விக்கிரகமும் உள்ளது.திருவொற்றியூர் படம்பக்க நாதரை தரிசிக்க வந்த அப்பர் சுவாமிகளுக்கு, இறைவன், காட்சி கொடுத்த இடம் தான், இன்றைய அப்பர் சுவாமி கோவில் என, கூறப்படுகிறது. அந்த இடத்தில், அப்பர் சுவாமிகள், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததால், அந்த கோவில், அப்பர் சுவாமி கோவில் என, அழைக்கப்படுகிறது. தற்போது அந்த கோவிலை சுற்றி, மிக நெருக்கமாக, குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகளாக உருவாகி விட்டன. கோவிலை சுற்றி, இதற்கு மேல் வீடு கட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. கோவிலை, பக்தர்கள் ஒன்று சேர்ந்து வலம் வர முடியாது. சன்னிதி வாசலும் தெரியாத அளவிற்கு, வாசல் குறுகி விட்டது.
நடவடிக்கை: இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் உள்ள அந்த கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை அகற்ற, ÷ காவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, “கோவில், ஒருகால பூஜை திட்டத்தில் உள்ளது. கோவில் சர்வே எண் மற்றும் அதை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் எவை என்பது குறித்து, வருவாய் துறையிடம் கேட்டுள்ளோம். விரைவில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவில் சீரமைக்கப்படும்சு என்றார்.