மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை அங்குரார்ப்பணம் முடிந்து, சேனை முதல்வர் வீதியுலா சென்றார். நேற்று அதிகாலை, சிறப்பு வழிபாட்டிற்கு பின், 5:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு, சக்கரத்தாழ்வார் நவசந்தி வழிபாடு நடந்தது. சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் வீதியுலா சென்றார். மே 6ம் தேதி வரை, தினமும், காலை, மாலை வேளைகளில் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும்.