காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நேபாளத்தில் பூகம்பத்தால் வாழ்வாதாரம் இழந்து நிற்பவர்களுக்கு, சங்கரமடம் சார்பில், 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மடத்தின் சார்பில் எல்லா வகையான உதவிகளும் செய்யப்படும். பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், மோட்ச தீபம் தினசரி ஏற்றப்படும். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.