திருவாடானை : திருவெற்றியூரில் பாகம்பிரியாள், வல்மீகநாதசுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா, ஏப்., 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதசுவாமி கல்யாண கோலத்தில் இரவு 10 மணிக்கு மண்டபத்தில் காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, இரவு 11.30 க்கு திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மே 1ல் தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.