திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் வைகுண்டவாசகப்பெரு மாள் கோவிலில், கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், கடந்த 1ம் தேதி திருக்கல் யாண உற்சவம் நடந்தது. நேற்று (3ம் தேதி) காலை 10:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதே வியுடன் ஸ்வர்ண கவசத்தில் தேரில்அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கோவிந்த கோஷம் முழங்க, வடம் பிடித்து மாடவீதிகளின் வழியே தேரை இழுத்துச் சென்றனர். மதியம் 12:30 மணிக்கு ஆஞ்சனேயர் கோவில் அருகில் நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:30 மணிக்கு தன் நிலையை அடைந்தது. இன்று(4ம்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சியுடன், பிரம்மோற்சவ விழா நிறை வடைகிறது. ஏற்பாடுகளை அகோபிலமட ஆதின நிர்வாகிகள் செய்திருந்தனர்.