Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரேணுகா பரமேஸ்வரி கோவில் தேர் ... அவலூர்பேட்டையில் அம்மன் ஜோதி பண்டிகை! அவலூர்பேட்டையில் அம்மன் ஜோதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

04 மே
2015
12:05

செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில், 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது. செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில் 15ஆம் ஆண்டு, 10 நாள் மகா உற்சவம் மற்றும் 6ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. அன்று காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, நவசந்தி காப்பும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. மாலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 2ம் தேதி மாலை 108 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து, பத்மினி தேவி மூர்த்தி தலைமையில், பெண்கள் 1008 பால் குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். பகல் 11:00 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், விழாகுழுவினர் ராமதாஸ், ரமேஷ், கார்த்திகேயன், ராஜசேகர், ரஜேஷ், கணேசன், முத்து கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர் அன்னதானம் நடந்தது. பூஜைகளை சந்தோஷ் திருமேனி சிவாச்சாரியார், ராஜேஷ் ராமாமித சிவாச்சாரியார் குழுவினர் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேர் வடம் பிடித்தல் வரும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar