ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகேதங்கச்சிமடம் வலசை தெருவில் உள்ள உஜ்ஜைனி மாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக, கடந்த சில மாதங்களாக திருப் பணிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம், கோயில் வளாகத்தில் முதல் கால யாக சாலை பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 2 ம் கால யாக சால பூஜை முடிந்ததும், புரோகிதர் சிவராசன் குருக்கள் தலைமையில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், மகா தீபாரதனை நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மாணிக்கம், கோபால், பாலு, சந்திரன், வல்லவ கணேசன், ஆறுமுகம் பலர் செய்திருந்தனர்.